பொது சிவில் சட்ட மசோதா உத்திராகண்ட் மாநில சட்டப்பேரவையில் தாக்கல்!
Jan 17, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது சிவில் சட்ட மசோதா உத்திராகண்ட் மாநில சட்டப்பேரவையில் தாக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது சிவில் சட்ட மசோதா உத்திராகண்ட் மாநில சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. அதன்படி, பலரும் தங்களது கருத்துக்களை அனுப்பினர். இந்த சட்டமானது இந்திய சட்ட ஆணையத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உத்திராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தாக்கலின்போது, ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற முழக்கங்கள் அவைக்குள் எழுப்பப்பட்டன. இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் அம்மாநில சட்டப்பேரவை பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை பரிந்துரைக்கும், பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவானது சட்டப்பேரவையில் நிறைவேறிய பிறகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத் இதுகுறித்து கூறுகையில், “மாநில அரசும், முதல்வரும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற ஆர்வமாக உள்ளனர். அதில், எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை. யாரிடமும் வரைவு நகல் இல்லை. இதன் மீதான விவாதம் நடத்த வேண்டும். மத்திய அரசு உத்தரகாண்ட் போன்ற உணர்வுப்பூர்வமான மாநிலத்தை அவர்களின் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டுமானால், அதை மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்றார்.

முன்னதாக, பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. இந்த பொது சிவில் சட்டம் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: General Civil Code Bill tabled in Uttarakhand State Assembly!
ShareTweetSendShare
Previous Post

பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies