அமெரிக்காவில் பிரபல நடிகர் காரல் வெதர்ஸ் திடீரென காலமானார். அவரது மறைவால் ஹாலிவுட் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஹாலிவுட் உலகில் முன்னணி நடிகர் காரல் வெதர்ஸ், பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ”ராகி” தொடர்களில் சக நண்பராக நடித்து அசத்தி இருப்பார்.
அதுபோலவே, நடிகர் அர்னால்டு ஸ்வாஷ் நேக்கர் நடிப்பில் பிரம்மாண்ட படமான ‘தி பிரிடேட்டர்’ படத்தில் ராணுவ கமாண்டராகவும் நடித்துப் புகழ் பெற்றார்.
மேலும், பல்வேறு தொலைக்காட்சி. சிரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் காரல் வெதர்ஸ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் அவர் எழுந்திருக்கவே இல்லை. இதனால், டாக்டர்கள் வந்து அவரை பரிசோதனை செய்த போது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மறைந்த காரல் வெதர்சிற்கு முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.