ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்து கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அபுதாபி சென்றுள்ளார்.
அவரை ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அன்புடன் வரவேற்றார். அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது.
1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் இந்து கோவிலின் வரலாற்று திறப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதற்காக ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அபுதாபி சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அன்புடன் வரவேற்றார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி உட்பட புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதை “நல்லிணக்கத்தின் திருவிழா” என அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்மாணத்திற்காக 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.