தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. நேற்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தேர்வு வினாத் தாள்களை வேண்டுமென்றே கசிய விடும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, க்யூட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: examupsc examrailway exam
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

Next Post

மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies