அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றிய யோசனைகள் என்னிடம் உள்ளது என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘அவதார்’. மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் 2022-ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. இந்தப் படமும் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் அடுத்தடுத்தப் பாகங்கள் உருவாகி வந்தன.
இந்நிலையில் அந்தப் படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, தள்ளி வைத்துள்ளது. அதன்படி ‘அவதார் 3’ 2025 ஆம் ஆண்டும், ‘அவதார் 4’ 2029-ம் ஆண்டும், ‘அவதார் 5’ 2031-ம் ஆண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி இந்த பாகங்கள் வெளியாகாத நிலையில் அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் கூறியுள்ளார்.
51 வது சாட்டர்ன் விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ” அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகத்தின் யோசனைகள் என்னிடம் உள்ளது ” என்று கூறினார்.
விழாவில் சிறந்த இயக்குநர் உட்பட நான்கு விருதுகளைப் பெற்ற கேமரூன், ‘ஸ்டார் வார்ஸ்’ மற்றும் ‘ஸ்டார் ட்ரெக்’ போன்ற ஒரு உரிமையாளராக ‘அவதார்’ பற்றி பேசினார்.
















