பிரதமரின் வீட்டுவசதி திட்டம்: தமிழகத்துக்கு இதுவரை 7.50 லட்சம் வீடுகள்!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்: தமிழகத்துக்கு இதுவரை 7.50 லட்சம் வீடுகள்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூவமாக பதிலளித்தார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியிருப்பதாவது, கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2 கோடியே 95 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த இலக்கில் 2 கோடியே 94 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதில், பிப்ரவரி 3-ஆம் தேதி வரை 2 கோடியே 55 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரத்து 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில அரசு பங்குத் தொகையுடன் சேர்த்து இதுவரை 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 900 பயனாளிகளுக்கு இன்னும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார்.

Tags: Prime Minister's Housing Scheme: 7.50 lakh houses for Tamil Nadu so far!
Share
Tweet
SendShare
Previous Post

அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன் !

Next Post

 17 சட்டவிரோத அமைப்புகளின் பட்டியல் மக்களவையில் சமர்பிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies