அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
டில்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு மற்றும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் (கரூர்), பி.எஸ். கந்தசாமி(அரவக்குறிச்சி), கோமதி சீனிவாசன்( வலங்கைமான்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.துரைசாமி(கோவை), எம்.வி.ரத்தினம்(பொள்ளாச்சி),
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP,… pic.twitter.com/874jx985o7
— K.Annamalai (@annamalai_k) February 7, 2024
வாசன்(வேடச்சந்தூர்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), அருள் (புவனகிரி), ராஜேந்திரன், தங்கராசு (ஆண்டிமடம்), குருநாதன், வி.ஆர். ஜெயராமன் (தேனி), பாலசுப்ரமணியன் (சீர்காழி), சந்திரசேகர் (சோழவந்தான்) உள்ளிட்ட 15 பேர் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
பா.ஜ.க.வுக்கு அனுபவச் செல்வத்தை கொண்டு வந்துள்ளோம் என்றும், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த விரும்புவதாக கூறினார்.
தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் ஆளும் திமுக மற்றும் அதிமுக மீது அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,
வரும் மக்களவையில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்றும் பிரதமர் மோடி கணித்துள்ளார்.
“கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., ஆர்வம் காட்டி வரும் நிலையில், 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது.