மும்பையில் கடற்கரைப் பகுதியில் நேற்று மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததை அடுத்து, அதில் இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் நேற்று இந்தியா கேட் அருகே சந்தேகத்திற்கிடமான “அப்துல்லா ஷெரீப்” என்ற படகு சுற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
படகில் மூன்று பேர் இருந்தனர். இவர்களை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த படகு குவைத்தில் இருந்து வந்துள்ளது. எனினும், அவர்களிடம் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் விசாரணையின் படி அவர்கள் மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு சம்பளம் வழங்கவில்லை.
மேலும் அங்கு அவர்களை மோசமாக நடத்தியதால் படகுடன் ஓடிவிட முடிவு செய்து மும்பை வந்ததாக என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.