19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 244 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்தில் விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் கேப்டன் உதய் மற்றும் சச்சின் தாஸ் ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் 48வது ஓவரில் முடிய இந்தியா 248 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
Congratulations to our U19 team on qualifying for the World Cup. The Indian cricket team has continued its unbeaten journey in this tournament, displaying excellent sportsmanship and skill. May your achievements keep our Tricolor billowing. All the best for the World cup finals.… pic.twitter.com/cxhq2EFu3X
— Amit Shah (@AmitShah) February 6, 2024
இதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணியின் மத்திய உள்துறை அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற எங்கள் U19 அணிக்கு வாழ்த்துகள். இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, சிறந்த விளையாட்டுத்திறனையும், தங்களின் திறமையையும் வெளிப்படுத்தி அசத்திய பயணத்தை தொடர்ந்துள்ளது. உங்கள் சாதனைகள் நம் தேசத்தை மகிழ்விக்கும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆல் தி பெஸ்ட் ” என்று பதிவிட்டுள்ளார்.