தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தப் பணியின் போது பேருந்து நிலைய அஸ்திவாரத்தின் அருகே காட்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தூணானது முறைப்படி கான்கிரீட் பாக்ஸ் என அழைக்கப்படும் இரும்பு பெட்டி அல்லது மர சட்டத்தை தூணை சுற்றி அடைத்து அதன் உள்ளே கான்கிரீட் கலவைகளை கொட்டி கான்கிரீட் போடுவது தான் வழக்கம்.
ஆனால், இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் தூண்கள் கட்டும் பணியில் செங்கலை வரிசையாக ஏனோ தானோ என அடுக்கி வைத்து அதன் உள்ளே இரும்பு கம்பியை பெயருக்கு வைத்து கான்கிரீட் போடும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் , மழைக்காலத்தில் ஏற்படும் நீர் ஊற்று காரணமாக பேருந்து நிலைய தூண்கள் வலுவடைந்து விடும் என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென பேருந்து நிறுத்த கட்டுமான பணியின் போது அங்கு திடீரென செங்கல் அடுக்கி வைத்து கான்கிரீட் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.