ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பனிக்கட்டிகளை கொண்டு விளையாடி வருகின்றனர்.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குளிரையும் பொருட்படுத்தாமல் பல சுற்றுலா பயணிகள் ஜம்மு & காஷ்மீருக்கு சென்று அந்த அழகிய இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
அந்த அழகிய இடத்தை கண்டால் யாராக இருந்தாலும் அந்த பனி கட்டியை எடுத்து விளையாட ஆசையாக தான் இருக்கும்.
அதிலும் குழுந்தைகள் அந்த இடத்திற்கு சென்றால் சொல்லவா வேண்டும். இந்த பனி பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்.
அந்த குழைந்தைகள் பனிக்கட்டிகளை தங்களின் சிறிய பொன் கரங்களால் எடுத்து, அதை பந்தாக நினைத்து விளையாடி மகிழ்கின்றனர்.
மழலைகள் அந்த பனி கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் வீசி உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், சக நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும் விளையாடி மகிழ்கின்றனர்.
மேலும் அவர்கள் பாடல் பாடி நடனமாடி தங்களின் குழந்தை பருவத்தை காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு நினைவு பயணமாக மாற்றுகின்றனர்.
இந்த அழகிய வெண் போர்வை போர்த்திய பனிகளை, பொம்மை படத்தில் மட்டுமே கண்ட குழந்தைகள் அதை நேரில் கண்டவுடன் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று மழலை சிரிப்பில் அந்த பனிக்கட்டிகளை உறைய வைக்கின்றனர்.