19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடவுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி முடிவடைந்தது. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடியது.
இந்தப் போட்டியில் இந்தியா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் வரும் ஞாயிற்றுகிழமை இறுதி போட்டியில் விளையாடும். இன்றைய அரையிறுதிப் போட்டி சஹாரா பார்க் மைதானத்தில் மத்திய 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.