மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்னர் ரிங் ரோடு வழக்கு, மதுபான வழக்கு, மணல் கொள்கை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி 2018ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியது. விரைவில் நாடாளுமனறத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உள்துறை அமித் ஷாவை சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இதனிடையே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) எம்பி, கல்லா ஜெயதேவையும் சந்திரபாபு நாயுடு இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.