ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு காலப் பொருளாதாரச் செயல்பாடுகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொருளாதாரத்தில் எப்படி மாற்றம் ஏற்பட்டது என்பதை மக்கள் முன் முன்வைக்க வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் குறைபாடுகள் இருந்தன.
பொருளாதாரம் இன்று பிரகாசிக்கிறது மற்றும் வேகமாக முன்னேறுகிறது என்றால், அதற்குக் காரணம் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் கொள்கைகள் மற்றும் பணிகளும் தான் என்றார்.
நாங்கள் பொருளாதாரத்தை நலிந்த நிலையில் பெற்றிருந்தோம். பணவீக்கம் உச்சத்தில் இருந்தது. இவை அனைத்தையும் மேம்படுத்த வேண்டியிருந்தது. பிரதமர் மோடியின் திறமையான மற்றும் தைரியமான தலைமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் உலகளவில் ஒளிரும் நட்சத்திரமாக மாறியுள்ளது என்றும் ஜெயந்த் சின்ஹா கூறினார்.