பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு
உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு, கிழக்கு-மேற்கு, மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்- கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிப்ரவரி- 10 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உலகிற்கே தேர்தலை அறிமுகம் செய்த, வரலாற்று சிறப்புமிக்க “குட ஓலை கல்வெட்டு கோவில் அமைந்துள்ள “உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழகம் முழுவதும்
“எண் மண் எண் மக்கள்” பாத யாத்திரை மேற்கொண்டுள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தரவுள்ளார்.
பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும், பொதுமக்களை வரவேற்றிடும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கிடவும், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், சிறிய பதாகைகள், ஆட்டோ விளம்பரங்கள் மூலமாகவும், வருங்கால முதல்வர் அண்ணாமலை வருகையினை ஏழை-எளிய மக்களுக்கு, அழைப்பு விடுத்து, அவர்களுடன்,
இணைந்து அனைத்து ஊராட்சிகளிலும் ஆளும் திராவிட மாடல் ஆட்சியின் ஊழல்களையும், குளறுபடி வேலைகளை, உண்மை தன்மையுடன் கூடிய ஆதார ஆவணங்களை கோப்புகளாக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சமர்ப்பிக்கவும், மாற்றுக் கட்சியினரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை மாநிலத்தலைவர் முன்னிலையில் இணைத்திடவும், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் இருந்தும் பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு
உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வின் போது, மாவட்ட துணைத் தலைவர்- சோழனூர்- ஏழுமலை, மேற்கு மண்டலத் தலைவர்-மனோகரன் ஊடகப் பிரிவு மண்டல தலைவர் காக்கநல்லூர்-
ஜி.ஆனந்தன், வள்ளலார் திருச்சபை நிர்வாகி-ஷங்கரன், உள்ளிட்ட கிழக்கு-மேற்கு மண்டல பாஜக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.