வைணவ மதத்தையும், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அன்பையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல ஸ்ரீல பிரபுபாதர் முக்கியப் பங்காற்றினார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆன்மீக குரு ஸ்ரீல பிரபுபாதாவின் நினைவாக ஒரு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
வைணவ துறவி சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவித்ததாகவும் கூறினார். இந்தப் புதிய இந்தியாவில் வளர்ச்சியும், பக்தியும் அருகருகே காண முடியும் என்று வலியுறுத்தினார்.
இந்த புதிய இந்தியாவில், மக்கள் நவீனத்துவம் மற்றும் அடையாளம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். பக்தி மற்றும் அறிவின் பாதைகளின் அழகான சமநிலை வாழ்க்கை என்று கூறினார்.
ஆச்சாராய ஸ்ரீல பிரபுபாதர் கௌடியா மிஷனின் நிறுவனர் ஆவார், அவர் வைஷ்ணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
கௌடியா மிஷன் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளையும், வைஷ்ணவத்தின் வளமான ஆன்மீக பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் பரப்பி, ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.