திருப்பூர் டவுன்ஹால் வளாகத்திற்கும் , மாநாட்டு அரங்கிற்கும் அந்த இடத்தைத் தானமாக வழங்கிய தியாகச் சீலர் ரங்கசாமி செட்டியாரின் பெயரை சூட்ட வேண்டும். மாறாக திமுக தலைவர்கள் பெயர்களைச் சூட்டக் கூடாது இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த, வள்ளல்களாகத் திகழ்ந்த மாபெரும் மகான்கள் ஆவார்கள்.
இன்று தொழில் துறையிலும், கல்வியிலும் அவர்களது கொடையே இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக மக்களின் பயன்பாட்டிற்குத் தானமாக வழங்கி, 26-06-1945 -ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டுப் பின்னர் 15-12-1955 -ம் ஆண்டுத் திறப்பு விழா செய்யப்பட்ட மிகவும் பழமையும், திருப்பூருக்கு பெருமையும் சேர்க்கும் வகையில் திகழ்ந்தது திருப்பூர் டவுன்ஹால்.
இந்த இடத்தை மிகப் பெருந்தன்மையுடன் வழங்கியவர் ரங்கநாதன் செட்டியார். தற்போது தமிழக அரசின் ஏற்பாட்டில் சீர்மிகு திருப்பூர் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுத் திறப்பு விழா காணத் தயாராகி வருகிறது.
எனவே, திருப்பூர் டவுன்ஹால் வளாகத்திற்கும் , மாநாட்டு அரங்கிற்கும் அந்த இடத்தைத் தானமாக வழங்கிய தியாகச் சீலர் ரங்கசாமி செட்டியாரின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும்.
மாறாக திமுக தலைவர்கள் பெயர்களைச் சூட்டக் கூடாது எனத் தமிழக அரசிற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.