ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழு தளபதி கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழு ஒன்று, ஆளில்லா விமானம் மூலம் ஜோர்டான் நாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்க இராணுவ வீரர்கள் மூன்று கொல்லப்பட்டனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பு நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் ஈரான், சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில், ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இந்த தாக்குதலில் ஆயுதக்குழுவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.