உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா கோவில் பனியால் சூழ்ந்துள்ளது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய சுற்றுலாத்தள பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து உள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா கோவில் பனியால் சூழ்ந்துள்ளது.
கோவிந்த்காட் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கோவில் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை 2-3 அடி பனியால் மூடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில் வளாகம், கோவில் மேற்கூரை என அனைத்தும் வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.