முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!
Oct 28, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார சீர்கேடுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக முறியடித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய  இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில்  மக்களவையில் இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை  அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2014ஆம் ஆண்டு  பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரம்  பலவீனமான நிலையில் இருந்தது. பொது நிதி மோசமான நிலையில் இருந்தது.  பொருளாதார முறைகேடு மற்றும் நிதி ஒழுங்கின்மை இருந்தது. பரவலாக ஊழல் காணப்பட்டது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை படிப்படியாக சீர்படுத்தும் பொறுப்பும்,  நிர்வாக அமைப்புகளை சீரமைக்க வேண்டிய பொறுப்பும் மகத்தானது.அப்போது மோசமான நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதை நமது அரசு தவிர்த்தது.அது எதிர்மறையான விளைவை கொடுத்து நம்பிக்கையை குலைத்திருக்கும்.

முதலீட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கையை அளிப்பதும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதும் மற்றும் மிகவும் தேவையான  சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அதை வளர்ச்சிப் பாதையில் அமைத்துவிட்டோம்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஒரு மரபுவழியாக விட்டுச் சென்ற சமாளிக்க முடியாத சவால்களை பொது களத்தில் வைப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

2014க்கு முந்தைய சகாப்தத்தின் ஒவ்வொரு சவால்களும் நமது பொருளாதார  மேலாண்மை மற்றும் நமது நிர்வாகத்தின் மூலம் முறியடிக்கப்பட்டன. இவை நாட்டை நிலையான  உறுதியான பாதையில் கொண்டு சென்றுள்ளன. இது எங்களின் சரியான கொள்கைகள், உண்மையான நோக்கங்கள் மற்றும் சரியான முடிவுகளால் சாத்தியமானது என்றும் வெள்ளை அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Indian EconomyndaWhite Paper tabled in Lok SabhaFinance Minister Nirmala Sitharmancongress economic mismanagementupa
Share
Tweet
SendShare
Previous Post

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

Next Post

உத்தரகாண்ட் : பனியால் சூழ்ந்த ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies