ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான முதல் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் குசல் மென்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலன்கா துணை கேப்டனாகவும் உள்ளனர். இதில் சிஎஸ்கே வீரர் மகேஷ் தீக்ஷன அணியில் இடம் பெற்றுள்ளார்.
Sri Lanka announces ODI squad for the Afghanistan series! Can't wait for some thrilling cricket action! 🇱🇰🆚🇦🇫 #SLvAFG pic.twitter.com/LmgtBqcJdv
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 8, 2024
இலங்கை அணி :
குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.