உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கு 15-18 மற்றும் 18-24 வயதுக்குட்பட்ட கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் வில்வித்தை, தடகளம், பூப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ், நீச்சல், கூடைப்பந்து, பளு தூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை secyzspc.sz[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு https:fci.gov.in/zone/south-zone/view/SPORTS-STIPEND-576 என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரு 28 ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.