டி.ஆர்.பாலு உருவத்தில் கீழ்வெண்மணி நில உடைமையாளர்களை காண முடிவதாக பாஜக மாநில பிரச்சார பிரவு தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது : இன்றைய திமுக, அன்று நில ”உடைமையாளர் சங்கம்” என்றுதான் துவக்கப்பட்டது! ”நில உடமையாளர்” என்னும் அகங்காரம்தான் திமுகவின் மனநிலை! ”மற்றவர்களெல்லாம் கூலிகள் தங்களுக்கு அடிமைகள்!” இதுதான் நில உடைமையாளர்கள் சங்கத்தினரின் மனநிலை! இவர்களைக்காட்டிலும் உயர்ந்தவர்களைப்போல காணப்பட்ட பிராமணர்களை எதிர்த்தார்கள்!
பிராமணர்கள் வெள்ளைக்காரன் நிர்வாகத்தில் அதிகமாக வேலைக்காரர்களாக இருந்தார்கள்! ஏன் என்று கேட்டபோது ”நாங்கள் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்”என்றனர் ஆங்கிலேயர்கள்! படிக்காத எங்களுக்கும் அவர்களைப்போல வேலை வேண்டும்! என்று வெள்ளைக்காரணிடம் கோரிக்கை வைத்து போராடினர் நில உடைமையாளர் சங்கத்தினர்!
இதில் பரம்பரையாக நில உடைமையாளர்கள் இருந்தார்கள், அராஜகம் மூலமாக திடீர் நில உடமையாளர்களாக மாறுவோர்தான் அதிகமாக இடம்பெற்று அராஜகத்தில் ஈடுபட்டார்கள்! திமுகவினர் மத்தியில் காணப்படும் நில அபகரிப்பு குற்றங்கள் அனைத்துமே இந்த நில உடைமையாளர் அராஜத்திலிருந்து முழைத்ததுதான்!
சுருக்கமாக சொல்வதானால் அராஜகத்தில் ஈடுபடும் ஆதிக்க ஜாதியினர் சங்கம்தான் நில உடைமையாளர் சங்கம்! நில உடைமையாளர் சங்கம்தான் திராவிட கழகம் ஆனது! திராவிட கழகம்தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆனது! பெயர் எப்படி மாறினாலும், இந்த குழுவினரின் பொது குணம் என்பது ஜாதி துவேசம்தான்! எளினய சமுதாயத்தவர்களை மிதிப்பார்கள், வலியோரை வணங்கி விழுவார்கள்!
1968ல் கீழ் வெண்மணி என்னும் தஞ்சாவூர் மாவட்ட கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் கூலி வேலை செய்துவந்த பட்டியலின மக்கள் சற்று ஊதியத்தை உயர்த்தி தாருங்கள் என்று நில உடைமையாளர்களை கேட்டார்கள்! திமுக சிந்தனை படைத்த நில உடைமையாளர்கள் தர மறுத்தார்கள்!
நில உடைமையாளர்களான மேல்ஜாதி என்னும் உணர்வுள்ள வெறியர்கள் கீழ்ஜாதி என இவர்களால் வரையறை செய்யப்பட்ட பட்டியலின மக்களை விரட்டி அடித்ததோடு விட்டுவிடாமல், ஒரு குடிசையில் அடைத்து வைத்து தீயிட்டு கொழுத்தினார்கள்! இனி இந்த அடிமை ஜாதியினர் யாரும் கூலி உயர்த்தி கேட்கக்கூடாது! அதற்கான பாடம்தான் கற்பித்துள்ளோம் என திக திமுக சிந்தனையாளர்களான நில உடைமையாளர்கள் கொக்கரித்தார்கள்!
அப்போது இந்த திக திமுகவின் அடிப்படைவாத தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்தார்! அவரிடம் நியாயம் கேட்டு சென்றபோது ஈ.வே.ராமராமி அவர்கள், “ கொடுக்கிற கூலிய வாங்கிட்டு போக வேண்டியதுதானே! இவனெல்லாம் கூலி உயர்வு கேட்டால் இப்படித்தான் நடக்கும்” என்றார் ஈ.வே.ரா அவர்கள்! இன்றைக்கும் திக திமுகவின் முன்னோடி தலைவர் இந்த ஈ.வே.ராதான்!
உண்மையான அசல் திமுக காரணாக விளங்குவோரிடம் இந்த கொள்கை இன்றளவும் ஊறிக்கிடக்கிறது! கீழ் ஜாதியினரை கட்டி வைத்து அடித்து வதைக்கும் கொடூரமான மனநிலை அவர்களின் ரத்தத்தில் ஓடுகிறது! அந்த நில உடைமையாளர் கொள்கையைத்தான் இப்போது திராவிடக்கொள்கை என்கிறார்கள்!
அப்படி ரத்தத்தில் ஊறிய நபர்தான் டி.ஆர்.பாலு என்னும் முன்னால் மத்திய அமைச்சரும் இன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்! அன்று குடிசைக்குள் கட்டி வைத்து எரித்தார்களே அதே தாழ்ந்த ஜாதியை சார்ந்த எல்.முருகன் அவர்கள் மத்திய பாஜக அரசால் மரியாதை செய்யப்பட்டு தமிழகத்தில் மத்திய அமைச்சராக இருக்கிறார்! பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த நிலையில்தான் திரு.எல்.முருகன் அவர்கள் மத்திய அமைச்சராக உயர்த்தப்பட்டார்!
7-2-2024 அன்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு அவர்கள், திமுகவின் இயல்பான பொய்யுரையை செய்துக்கொண்டிருந்த வேளையில், குறுக்கிட்டு உண்மையை உணர்த்த முற்பட்ட வேளையில்-
இழிபிறப்பான நீ குறுக்கிடாதே பேசாதே என பொருட்படும் வகையில் கத்தினார்!
அங்கே அவர் ஆங்கிலத்தில் பேசினார்!
ஆங்கிலத்தில்”YOU” என்னும் சொல்லை பயன்படுத்தினார் டி.ஆர்.பாலு!
“Sir” என்னும் வார்த்தையை பயன் படுத்தவில்லை!
Sir You என்று சொல்லியிருந்தால் நீங்கள் என பொருள் கொள்ளலாம்!
You என்று மட்டும் குறிப்பிட்டு அவர் பேசியபோது, அவரது உடல்மொழியை பார்த்தால், எனக்கு கீழ் வெண்மணி சம்பவம்தான் நிலைவுக்கு வந்தது! அவ்வளவு வன்மை அவரது பேச்சில் இருந்தது!
அந்த கீழ்வெண்மணி சம்பவத்தில் 44 பேர் எரிக்கப்பட்டார்கள்! வழக்கு நடந்தது, யாருக்கும் தண்டணை வழங்கப்படாமல் தீர்ப்பு திமுக ஆட்சியில் வெளியானது! நில உடைமையாளர்களின் அரசான திமுக அரசுதான் சாட்சிகளை முன் நிறுத்தி சரியான தீர்ப்பினை வாங்கி தந்திருக்க வேண்டும்,
ஆனால் திமுக அரசு ஏழை மக்களுக்கு நியாயம்வழங்க முயலவில்லை! கொடுமையின் உச்சமாக திமுக மேல் முறையீடும் செய்யவில்லை! ஈ.வே.ரா சொன்னதை நடைமுறைப்படுத்தியது ஈ.வே.ராவின் அரசு!
அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுகவும் மேல் முறையீடு செய்யவில்லை! ”நீ உட்கார்! நீ உட்கார்! பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை! எதற்கு குறுக்கிடுகிறாய்! அமைச்சராய் இருக்கவே நீ தகுதியற்றவன்! நீ உட்கார்!” இதுதான் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்களை பார்த்து கை நீட்டி கொப்பளித்த வார்த்தைகள்!
நீ அமைச்சராக இருக்க தகுதியற்றவன் என்று பி.ஹச்டி முடித்த, தேசிய அளவில் பட்டியலின மக்களுக்கான ஆணையத்திற்கு தலைவராக பதவி வகித்த, டாக்டர்.எல். முருகன் அவர்களை சொன்ன இவர் 8 ம் வகுப்போ 10 ம் வகுப்போ முடித்தவர்! லாரி ஓட்டும் தொழிலை செய்த நிலையில் மந்திரி ஆனவர்! சாராயம் காய்க்கும் வேலையை செய்து கொண்டிருப்பவர்! இப்போதும் இவர் சாராய வியாபாரிதான்! பத்தாயிரம் கோடி அளவுக்கு ஊர்பணத்தை அபகரித்து வைத்திருப்பவர்! அதற்கான வழக்கினை சந்தித்துக்கொண்டிருப்பவர்!
குப்பை மேட்டில் கிடந்த ஏதோ ஒன்று கோயிலில் பூஜையில் இருந்ததை எட்டி உதைத்த கதையாக இந்த கதை உள்ளது! மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் டி.ஆர்.பாலுவின் இந்த ஜாதி இழிவு பேச்சுக்கு கடுமையான கண்டணத்தை தெரிவித்துள்ளார்!
பாரதிய ஜனதா கட்சி ஜனாதிபதி திரெளபதி முர்மு என்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் குலமகள் தலைமையில் மண்ணின் மைந்தர்களுக்கான கட்சியாக உள்ளது! திமுகவோ தாழ்த்தப்பட்ட மக்களை கட்டி வைத்து எரித்துக்கொல்லும் மன நிலையில் இன்றும் இருக்கிறது! அந்த மன நிலையைத்தான் நாடாளுமன்றத்தில், டி.ஆர்.பாலு வெளிப்படுத்தினார்! டி.ஆர்.பாலுவை மட்டுமல்ல, திமுகவையே வீழ்த்திவிடும் தேர்தலாக வரும் நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளது!
மக்கள் தலைவரின் கண்டணம் குறித்து பத்திரிக்கையாளர்கள் டி.ஆர்.பாலுவை கேட்டபோது, என் தகுதிக்கு நான் அன்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லியுள்ளார்! திமிர் தலைக்கு ஏறியிருக்கிறது அந்த நபருக்கு! ”லாறி டிறைவர்” ”சாராயம் காய்ப்பு” ”பல ஆயிரம் கோடிகள் முறைகேடாக சம்பாத்தியம்” இந்த மூன்றையும் கூட்டி பார்த்தால் உங்கள் மனக்கண்ணில் என்ன தோன்றுகிறதோ, அதுதான் இந்த முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான டி.ஆர்.பாலுவிடம் தென்படுகிறது!
நாம் அமைத்திருக்கும் ராமர் படைக்கு முன்னால், இதுவெல்லாம் மண்ணைக்கவ்வும் அவமான சின்னங்களே என குமரி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.