5-வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
5-வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
சில லீக் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா நேற்று அமெரிக்காவுடன் விளையாடியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணி சார்பாக வந்தனா கட்டாரியா, தீபிகா மற்றும் சலீமா டேடே தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்கா அணி சார்பாக சன்னி கார்ல்ஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் மீண்டும் சீனாவுடன் வரும் 12 ஆம் தேதி விளையாடவுள்ளது.