தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பத்ம விபூஷன் விருது பெற்ற சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கியுள்ளார்.
75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பத்மவிபூஷண் விருது வென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஹைரபாத்தில் இருக்கும் ராஜ் பவனுக்கு சிரு மற்றும் அவரது மனைவி சுரேகாவை அழைத்து அவருக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
பத்ம விபூஷன் விருது பெற்ற நடிகர் சிரஞ்சிவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். மேலும் சுப்ரமணிய சுவாமி சிலையையும் பரிசாக வழங்கினார். தமிழிசை அவரது கணவர் சௌந்தரராஜனை சிரஞ்சீவிக்கு ஸ்பெஷலாக அறிமுகமும் செய்து வைத்தார். சிரஞ்சீவிக்கு மரியாதையும் வாழ்த்தும் கூறிய போது எடுத்த புகைப்படங்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மெகாஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு பத்மபூஷன் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. சமூக சேவை செய்து, பல உயிர்களை காப்பாற்றி, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றதற்கு கிடைத்திருக்கும் பெருமைதான் இது.. மேலும் போதை பொருள், மனசோர்வு போன்ற சமூக தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற உங்களது குரலை கொடுங்கள்” என பதிவு செய்துள்ளார்.
Felicitated Padma Vibhushan Awardee Megastar Shri.Chiranjeevi Konidela garu at Rajbhavan,#Hyderabad.
Congratulations Megastar Shri.Chiranjeevi Konidela garu for the #PadmaVibhushan award confered on you.Well deserved honour as you touched hearts of several millions beyond screen… pic.twitter.com/kBQorlD1km
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 9, 2024