மறைமுகமாக இஷான் கிஷனை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Mar 28, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைமுகமாக இஷான் கிஷனை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தனது எக்ஸ் பக்கத்தில் இஷான் கிஷனின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரை விமர்சித்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தொடரின்போது பாதியிலேயே இந்திய வீரர் இஷான் கிஷன் விலகினார்.

ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இஷான் கிஷன் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டார். அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக அந்த தொடரிலிருந்து விடுப்பு கொடுத்தது.

அந்த நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் விளையாடி பார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று பயிற்சியளர் ராகுல் டிராவிட் அவருக்கு அறிவுரை தெரிவித்தார்.

அதனால் கடந்த 9 ஆம் தேதி ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்டுக்கு இஷான் கிஷன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதனை செய்யாத இஷான் கிஷன், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோருடன் இணைந்து குஜராத்தில் உள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது தெரிய வந்தது.

அதன் காரணமாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் பயிற்சி எடுக்க தேவையான நேரம் இருக்கும் ஒரு வீரருக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு நேரமில்லையா என இஷான் கிஷனை முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

இர்பான் பதான், தனது எக்ஸ் பக்கத்தில் இஷான் கிஷனின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அதில் , “பயிற்சி எடுப்பதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கும் ஒருவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாதது பற்றி குழப்பம் ஏற்படுகிறது. இது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The former cricketer who indirectly criticized Ishan Kishan!indian cricket team
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாள்! – பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

திமுக அரசுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை! – அண்ணாமலை

Related News

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் – ஐஐடி இயக்குனர் காமகோடி

மதுரை சித்திரை திருவிழா : மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா!

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்த போது விஜய் எங்கே சென்றார் – சீமான் கேள்வி!

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு – அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – ஜோதிமணி எம்.பி வேதனை!

ஊருக்கேற்ப கொள்கை மற்றும் கூட்டணியை மாற்றும் திமுக – இபிஎஸ் கடும் விமர்சனம்!

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை : அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies