முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!
Mar 19, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று (திங்கள்கிழமை) விலகி உள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு எழுதியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அசோக் சவான், மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து பேசியுள்ளார். அசோக் சவான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்” என்றார்.

அசோக் சவானோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்களான சுபாஷ் தோட்டி, ஜித்தேஷ் அந்தர்புர்கர், அமர் ராஜூர்கர் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Chief Minister Ashok Chavan resigned from the Congress party!
ShareTweetSendShare
Previous Post

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் வெற்றி!

Next Post

8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு!

Related News

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies