நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சரியான தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும், முதல் முறை வாக்காளர்களான இளம் தலைமுறையினரின் பொறுப்புகள் குறித்து மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல் செய்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவச் செல்வங்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
இன்றைய தினம், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவச் செல்வங்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும், எதிர்காலத்திற்கான… pic.twitter.com/wbuxCzmOtg
— K.Annamalai (@annamalai_k) February 13, 2024
புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும், எதிர்காலத்திற்கான முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவதும், புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டு வருவதும் என, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உள்ள வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதிலும், நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சரியான தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும், முதல் முறை வாக்காளர்களான இளம் தலைமுறையினரின் பொறுப்புகள் குறித்து விவரித்தேன்.
புகழ்பெற்ற ஏசிஎஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர்களிடம் உரையாடும் இந்த நல்வாய்ப்பை வழங்கியதற்காக, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தருமான அண்ணன் திரு @DrACSofficial
அவர்கள் மற்றும், நிறுவனத்தின் தலைவர் திரு ACS அருண் குமார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.