நடிகை த்ரிஷா பிரபல நடிகரின் படத்திற்காக மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்தது மட்டுமின்றி இந்த படத்திற்காக களரிச்சண்டை மற்றும் குதிரை ஏற்றம் ஆகியவைகளை பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான விளங்குபவர் நடிகை த்ரிஷா. இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பின்பு வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் உடன் ’லியோ’ படத்தில் நடித்த த்ரிஷா, அஜித்துடன் ’விடாமுயற்சி’ கமல்ஹாசன் உடன் ’தக்ஃலைப்’ மோகன்லாலுடன் ’ராம்’ உள்பட பிரபலங்களுடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’விஸ்வாம்பரா’ என்ற படத்தில் த்ரிஷா தான் நாயகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிரஞ்சீவி உடன் நடிப்பது தனது மிகுந்த மகிழ்ச்சி என்று த்ரிஷா தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக மொத்தமாக 50 நாட்கள் த்ரிஷா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி சிரஞ்சீவிக்கு நிகரான வேடம் என்பதால் இந்த படத்தின் தனது கேரக்டருக்காக களரி சண்டைகள், குதிரை ஏற்றம் ஆகியவற்றை ஹைதராபாத்தில் த்ரிஷா பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தில் த்ரிஷாவின் வேற லெவல் ஆக்சன் நடிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.