வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
இந்த பேட்டியில், இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மனுஷ் என்பவர் அவதூறு பரப்பி வந்தார். இதனால், பியூஸ் மனுஷ்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து, சேலம் நீதிமன்றத்தில் பியூஸ் மனுஷ் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பாக, சேலம் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்துச் செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.