வெற்றி துரைசாமி பூதவுடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான, அண்ணன் சைதை துரைசாமி இல்லத்துக்குச் சென்று, அவரது மகன் வெற்றி துரைசாமி அவர்களது பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான, அண்ணன் திரு @SDsamy52 அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரது மகன் திரு.வெற்றி துரைசாமி அவர்களது பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
துடிப்பு மிக்க இளைஞராக, பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சகோதரர் திரு. வெற்றி… pic.twitter.com/4tHo6FRDT7
— K.Annamalai (@annamalai_k) February 13, 2024
துடிப்பு மிக்க இளைஞராக, பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சகோதரர் வெற்றி துரைசாமி அவர்களது இழப்பு, ஆறுதல் சொல்லி எளிதில் கடந்து செல்ல இயலாதது. இந்தக் கடினமான நேரத்தில் இருந்து மீண்டு வர, அண்ணன் சைதை துரைசாமி
அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இறைவன் துணையிருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.