அதிர்ச்சி - 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!
Oct 11, 2025, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர்ச்சி – 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பல்கி பெருகி வருகிறது. இதை தமிழக பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புள்ளி விவரங்களோடு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள் நடைபெற்றது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, அரசு விதிகளின்படி, 18 வயது நிரம்பிய பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும் 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் அதிக அளவு பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், கிராமப்புறங்களில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பை தொடர முடியாமல் 18 வயதில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது.

இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால், பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,488 இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில் 1,101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மட்டும் சுமார் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாகப் புறநகர் பகுதியில் உள்ள மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதும் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இப்படி சட்ட விரோதமாக மைனர் பிரசவங்கள் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Shock - 1448 minor deliveries in 3 years!
ShareTweetSendShare
Previous Post

அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Next Post

அபுதாபி இந்து கோவில் : மத நல்லிணக்கத்தின் சின்னம்!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies