நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! - ராஜ்நாத் சிங்
Aug 25, 2025, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Feb 14, 2024, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக (PMML) சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று  (13 பிப்ரவரி 2024) நடைபெற்றது. இந்த சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் ஆய்வு செய்யப்பட்ட கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது உரையில்,

பிரதமர் அருங்காட்சியகத்தை இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 7.5 லட்சம் பேர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர் என்று கூறினார். ஒவ்வொருவரும் சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் இளைய தலைமுறையினர், நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்று  தெரிவித்தார்.

நவீன மற்றும் தற்கால இந்திய வரலாற்றில் இந்த அருங்காட்சியகம்  முன்னணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நவீன மற்றும் சமகால இந்தியாவின் மகத்தான ஆளுமைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை நிறுவனத்தின் கையெழுத்துப் பிரதிகள் பிரிவு கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார். அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய ஆதாரமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் ஒன்பது தொகுதிகளை வெளியிட்டதற்காகவும், அவரது நூற்றாண்டு விழாவில் மேலும் 11 தொகுதிகளை வெளியிடும் எதிர்காலத் திட்டத்திற்காகவும் இந்த அருங்காட்சியக நிறுவனத்தை பாராட்டினார்.

ராஜகோபாலாச்சாரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட எல்லை வரலாற்றுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும் இந்த அருங்காட்சியக சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிர்வாகக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசினார்.

Tags: Defense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Next Post

ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies