திமுக ஆட்சியில் தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது! - அண்ணாமலை
Jul 26, 2025, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 15, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய, கோவை தீவிரவாத தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து, நேற்றோடு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், இன்றும் அதன் தாக்கம், தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவாய், அழியாத ரணமாய் உறைந்திருக்கிறது.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, கோவை குண்டு வெடிப்பில் தங்கள் இன்னுயிரை நீத்த 58 அப்பாவிப் பொதுமக்களுக்கு பாஜக சாா்பில் புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

தமிழகத்தில் மேலும் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள, தமிழக மக்கள் மனதளவில் கூடத் தயாராக இல்லை.ஆனால், ஆட்சியில் இருக்கும் திமுக, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தீவிரவாதிகளைக் காப்பாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை, பொதுமக்கள் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதெல்லாம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற இடமாக, சொர்க்கபுரியாகவே இருந்து வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்றும், காவல்துறையினரை, விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளைவு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். திமுகவுடன் இன்று கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் இவை மறந்திருக்கலாம். ஆனால், பொதுமக்கள் மறக்கவில்லை.

1998 ஆம் ஆண்டு, இதே பிப்ரவரி 14 அன்று, பாரத ரத்னா அத்வானி அவர்கள் பேசவிருந்த பொதுக்கூட்ட மேடையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு வெடித்து, பின்னர் கோவையில், உக்கடம், காந்திபுரம், ரயில்வே சந்திப்பு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனத் தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக, 58 உயிர்களை இழந்தோம்.

250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதிகள் 9 பேரை, கடந்த 2009 ஆம் ஆண்டு, அண்ணாதுரை நூற்றாண்டு விழா என்று கூறி விடுதலை செய்த திமுக, தற்போது, முக்கியத் தீவிரவாதி பாஷா உட்பட மீதமிருக்கும் 16 பேரையும் விடுதலை செய்யத் துடிக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம், இவர்கள் செய்த குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, உச்சநீதிமன்றம், இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூட மறுத்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக துடிப்பதன் நோக்கம் என்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, பலரைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்த பிறகும், இன்றளவும், சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வரும் திமுக, தமிழகக் காவல்துறை மீதும் அழுத்தம் கொடுத்து அவ்வாறே சொல்ல வைத்திருக்கிறது.

கோவையில் இது போன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தேசிய உளவுத் துறை எச்சரிக்கை செய்தும், அதனைக் கண்டுகொள்ளாமல், நிர்வாகத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது திமுக அரசு.

பல்வேறு வெடிபொருள்கள், ISIS தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் என அனைத்தும் வெளிப்பட்ட பிறகும், எதற்காக சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக?

நேற்றைய தினம், தமிழகத்தில் 12 இடங்களில், NIA சோதனை நடத்தியதில், அரபிக் வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருவது வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் அரபிக் கல்லூரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளதால், தமிழகத்தில் பல முறை NIA சோதனைகள் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் செயல்படும் பாஜகவினரைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது.

மத்தியில் கடந்த 2004 – 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாடு முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகினர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவினுள் எங்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. எல்லையில் நடைபெறும் கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு, அவர்கள் இடத்திற்குச் சென்றே பதிலடி கொடுத்து, அவர்கள் இருப்பையே அழிக்கும் ஆண்மையுள்ள ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தீவிரவாதம் என்பது அனைவருக்கும் எதிரி என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். PFI தீவிரவாத இயக்கம் இதுவரை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பல பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் படுகொலை செய்ததோடு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசித் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவர்கள் அனைவரின் நோக்கம், பொதுமக்கள் பாதுகாப்பை அடகு வைத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது மட்டும்தானே தவிர, மக்கள் நலன் அல்ல. இதைக் கருத்தில் கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது மக்கள் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalaikovai bomb blast
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை : அஜித் கோப்சேட்

Next Post

புரோ கபடி : புனேரி பல்டன் அணி வெற்றி!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies