நாடளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகைதர உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
இதனையொட்டி, நாடளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகைதர உள்ளார்.
அப்போது, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
வரும் 24 மற்றும் 25 -ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் இரண்டு நாட்கள் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.