இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும்! - பிரதமர் மோடி அழைப்பு!
Jul 29, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும்! – பிரதமர் மோடி அழைப்பு!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர்  நரேந்திர மோடி பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

“எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்” என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10  நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,

நிர்வாகத்தின் தன்மை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார்.

நலன், உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த இந்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நிர்வாகத்திற்கான மனிதநேய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை அடைய மக்களின் பங்கேற்பு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்களைச் சென்றடையச் செய்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தன்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அரசுகள் ஒத்துழைத்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப ரீதியான, தூய்மையான வெளிப்படையான, பசுமையான அம்சங்கள் தற்போதைய நிர்வாகத்தின் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.

இந்தச் சூழலில், அரசுகள் பொதுச் சேவையில் தங்களது அணுகுமுறையில், எளிதான வாழ்க்கைமுறை, எளிதான நீதி, எளிதான போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை விவரித்த அவர், நீடித்த உலகை உருவாக்க இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தச் சூழலில், உலகளாவிய தென்பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறித்த கவலைகளை உலகளாவிய விவாதத்தின் மைய அரங்கிற்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்று அழைப்பு விடுத்த அவர், முடிவெடுப்பதில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“உலக நாடுகளின் நண்பன்” என்ற தனது பங்கின் அடிப்படையில் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags: uaePM Modi
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஜரூர் – தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை!

Next Post

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies