டெல்லியை தலைமயிடமாக் கொண்டு இயங்கி வரும் நவசமாஜ் அமைப்புச் சார்பில், பாரதப் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு நகரத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் அருகே உள்ள பிரமாண்ட அரங்கில் நவசமாஜ் கூட்டம், அதன் மாநில தலைவர் பேராசிரியர். முனைவர் மா.அன்பானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில செயலாளர் பன்வார் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளர் பாலச்சந்தர் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில், மாநில இணைச் செயலாளர் அரிமா.மதிவாணன், முக்கியத் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். பெரும்பாலான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.
பீகார் முதல்வராக ஜன்நாயக் கர்பூரி தாக்கூர் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர். மேலும், அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இட ஒதுக்கீடு கோரி செயல்பட்டார்.
இந்த நிலையில், மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது. எனவே, பாரதப் பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைர் திரௌபதி முர்மு-வுக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.