சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 
Aug 10, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 11:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்து விசாரிக்க 6 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம்  சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.

அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்குக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் நேற்று சென்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மயங்கி சரிந்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, சந்தேஷ்காளி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கொண்ட 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.  உயர்மட்டக் குழுவின் கன்வீனராக மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களாக பிரதிமா பௌமிக், பாஜக எம்பிக்கள் சுனிதா துக்கல், கவிதா படிதார், சங்கீதா யாதவ் மற்றும் பிரிஜ்லால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடவும், நிலைமையை ஆய்வு செய்யவும்,பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே சந்தேஷ்காளி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக  உள்ளதாகவும், ரவுடிகளுடன் காவல்துறையினர் கைகோர்த்து செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனந்த போஸ் அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Tags: west bengalBJP six-member committeeSandeshkhali in West BengalUnion Minister Annapurna Devi
Share
Tweet
SendShare
Previous Post

நவசமாஜ் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு!

Next Post

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

Related News

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies