வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI
Oct 5, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

Manikandan by Manikandan
Oct 5, 2026, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் UPI உள்ளிட்ட டிஜிட்டல் பணம் செலுத்தும் துறை, வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையை AI தொழில்நுட்பம் எளிதாக்கி உள்ளது. Gen AI & Advanced Machine Learning என்ற AI தொழில்நுட்பம் வெறும் மேல்மட்ட உரையாடலைத் தாண்டி, பணப் பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிற்கு உள்ளேயே ஆழமாக செயல்படத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட இந்த AI மாடல்கள் நிகழ்நேர இடர் மதிப்பீட்டை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதையும் அதனால் எழும் சவால்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….

UPI மூலம் தடையற்ற பணப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், மோசடியைக் கண்டறியவும், பரிவர்த்தனைகளை வழிநடத்தவும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் AI மாடல்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

நிதி மோசடி மற்றும் AI ஏற்படும் அச்சுறுத்தல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நிதிச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாக 25 நாடுகளைச் சேர்ந்த 1,440 ஆளுமைகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் மற்றும் நிதிக் குற்றத் தடுப்பு பிரிவை சேர்ந்த 100 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், 90 சதவீதம் பேர் தங்கள் நிறுவனங்களில் 2025-ல் AI மூலம் மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். இது 81 சதவீதம் என்ற சர்வதேச சராசரியை விட மிகவும் அதிகமாகும்.

உடனடிப் பணப்பரிவர்த்தனை முறைகள் மூலமான மோசடி முயற்சிகளே, அதிகரித்து வரும் நிதி மோசடிக்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதாக இந்திய வங்கித் தலைவர்களில் 66% பேர் குறிப்பிட்டுள்ளனர். இது உலக சராசரியான 59 சதவீதத்தை விட அதிகமாகும். இந்தியாவில் யுபிஐ (UPI) வேகமாகப் பரவுவது, மோசடிக்காரர்களுக்கு புதிய வழிகளை திறந்துவிடக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இந்த ஆண்டு நடந்த Global Fintech Fest நிகழ்வில் Agent-based Payments மற்றும் AI Agents in Payments என்பதே மிக முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாக விவாதிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான PRODUCT களைக் கண்டறியவும், முடிவுகளை எடுக்கவும், இறுதியில் நுகர்வோர் சார்பாகப் பணம் செலுத்துவும் பரிவர்த்தனையை முடிக்கவும் AI agents அனுமதிக்கின்றன.

இது வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை நெட்வொர்க்-களுக்கு ஒரு புதிய சிக்கலையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகள் இதை மேலும் சிக்கலாக்குகின்றன.

ஒரு மாதத்தில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் UPI, சராசரியாக அதன் தினசரி பரிவர்த்தனை அளவு கிட்டத்தட்ட 791 மில்லியனை எட்டுகிறது.

அதிகரித்து வரும் மோசடிகளுக்கு, உடனடிப் பணப்பரிவர்த்தனை முறைகள் மூலமான மோசடிகளே முதன்மைக் காரணம் என்று பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நிகழ் நேர இடர் மதிப்பீட்டை நோக்கி நகர்ந்து வரும் ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இடர் மதிப்பெண்ணை வழங்குவதற்காக AI யைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள் முழுவதும் டெபிட் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் தடுக்க அனுமதிக்கும் ஒரு “கில் ஸ்விட்ச்” பற்றியும் ஆலோசனை செய்து வருகிறது.

வல்கன் (Vulcan) போன்ற புதிய AI மாடல்கள், பல்வேறு துறைகளில் நிகழ்நேர இடர் மதிப்பீட்டை மிகவும் துல்லியமாகவும் வேகமாகவும் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இது பரிவர்த்தனை நடக்கும் அந்தச் சில மில்லி விநாடிகளிலேயே (Milliseconds), அது முறையான பரிவர்த்தனையா அல்லது மோசடியா என்பதை AI அல்காரிதம்கள் கண்டறிகின்றன.

வாடிக்கையாளரின் வழக்கமான இருப்பிடம், செலவு செய்யும் முறை மற்றும் சாதனங்களின் தரவுகளை ஆராய்ந்து, மோசடிகளை உடனுக்குடன் தடுக்கின்றன. இந்த AI மாடல் 29 மில்லி விநாடிகளுக்குள் முடிவுகளை எடுக்க முடியும் என்று ரேஸர்பே தெரிவித்துள்ளது.

ஒரு வாடிக்கையாளர், செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு அதிகாரத்தை வழங்கி, குறிப்பிட்ட எல்லைகளுக்குள் பல முடிவுகளை எடுக்க அதை அனுமதிக்கலாம், ஆனால் அது பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு புதிய கேள்விகளின் தொகுப்பை உருவாக்குகிறது.

ஒவ்வொரு பரிவர்த்தனைக் கோரிக்கைக்கும், அந்த முகவர் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்பட்டவரா என்பதை நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும்.

அது அதிகார வரம்பிற்குள் செயல்படுகிறதா? அந்தப் பரிவர்த்தனை வாடிக்கையாளரின் கடந்தகால நடத்தைக்கு இணக்கமாக உள்ளதா? அந்த முகவர் அதன் செலவு வரம்பை மீறிவிட்டதா? மேலும், அந்தப் பரிவர்த்தனை மோசடியானதாக இருந்தால், அதற்கு யார் பொறுப்பு?

இத்தனை கேள்விகளுக்கும் சில மில்லி விநாடிகளுக்குள் இந்த AI மாடல் பதிலளித்து பண பரிவர்தனையை செய்கிறது அல்லது மோசடையைத் தடுக்கிறது.

முறையான பரிவர்த்தனைகளுக்குக் குறைந்த தலையீடே தேவைப்படும் அதே வேளையில், இது பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Tags: upiupdateSecurityCHATBOT
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Next Post

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

Related News

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies