இந்தியா – சுவிட்சர்லாந்து உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலினுடனான சந்திப்பின் போது பேசிய மோடி, இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைமுறைக்கு வந்ததாக குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டையும், 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
















