ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது
இந்த வழக்கில் வீரமணி மற்றும் அவருக்கு உதவிய சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் வீரமணியிடம் சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் லாசர்,பார்த்திபன் மற்றும் பாபு ஆகிய மூவரை SIT அதிகாரிகள் கைது செய்தனர்
அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து
















