கேரளா அரசு 41 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் இழுத்தடிப்பதாக பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட ஒப்பந்தப்படி, இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அக்டோபர் முதல் ஜனவரி வரை கிடைக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், இடைமலையாறு திட்டம் நிறைவேற்றப்பட்டும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 2.5 டி.எம்.சி தண்ணீரை கேரளா பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் மழை குறைந்துள்ளதால், கேரள அரசுடன் பேசி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















