ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூறியிருந்தனர்.
இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி
அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட கோரியும் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வீரமணி வழக்கில் இணைத்து பேசிய அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
















