ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சருடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் மற்றும் தடகள வீரர்களுக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்.
அப்போது பேசிய அவர், ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சருடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையைப் போலவே பயிற்சியாளர்களுக்கும் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்குள் அனைத்து விளையாட்டு நகரங்களும் உருவாக்கப்படும் என்றும், 8 வயது முதல் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வரை வீரர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார்.
















