சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மேலிட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளர்கள் கடந்த மாதம் 23ம் தேதி நியமிக்கப்பட்டனர். மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ், புதிய இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா, டி.கே. அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பொறுப்பேற்று முதன்முறையாக தி.நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை செளந்தராரஜன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
















