கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கடந்த ஜனவரி 22 அன்று, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வணக்கத்திற்குரிய காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆசியுடன் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை, கடந்த 1981 ஆம் ஆண்டு, LMW குழுமத்தின் தலைவரான அமரர் டாக்டர் ஜி.கே.தேவராஜுலு அவர்களால் நிறுவப்பட்டது.
இந்த அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் வேத பாடசாலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்கள் வேதம் கற்று, இன்று, வேத ஆசிரியர்களாகவும், புரோகிதர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 22 அன்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், இன்று மாலை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும்… pic.twitter.com/ztoNbvgIBE
— K.Annamalai (@annamalai_k) February 14, 2024
இந்த வேத பாடசாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேதங்களின் சிறப்பையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து உயிர்ப்பிக்கும் உயர் லட்சியத்துடன் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை, பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவர் ரவி சேம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.