ட்ரான்கள் மூலம் வரும் சத்தத்தை கண்டறிவதற்காக, புதிய மற்றும் தனித்துவமான ட்ரோன் எதிர்ப்பு கருவியை ஜம்மு காஷ்மீரில் ஐஐடி ஜம்முவை சேர்ந்த மின் பொறியியல் துறை ஆசிரியர் D.R கரண் நத்வாணி உருவாக்கியுள்ளார். இது முக்கியமாக ஒலி தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது முதல் வகையாகும், நாங்கள் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம் இது ஒலி அடிப்படையாக கொண்டு ட்ரானை கண்டறிதலாகும். இந்த அமைப்பு ட்ரோன்கள் வெளியிடும் ஒலியைக் கண்டறிந்து, அவர்களை அடையாளம் காண உதவும்.
கணினியின் தரவுத்தளம், மற்றும் பொருத்தம் கண்டறியப்பட்டால், ட்ரோன் கண்டறியப்படும். இதற்கான செலவு சுமார் ரூ. 4 லட்சம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இதன் செலவு, எளிதில் உபயோகப்படுத்துதல், அணைத்து மக்களும் பயன்படுத்த எளிதில் பெறக்கூடியவை.
இந்த ஒலி அடிப்படையிலான ட்ரோன் கண்டறிதல் கருவி மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரான்கள் மற்றும் பறவைகளை கண்டறியலாம்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கையாள்வதுடன், மிகப்பெரிய சவாலாக உள்ளது ட்ரான்கள்.
தற்போது பாதுகாப்பு படைகள் ஆளில்லா விமானங்கள். ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்களை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், ட்ரோன்களின் அதிகரித்து வரும் போக்கை சமாளிக்க பாதுகாப்பு படைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதனை உருவாக்குவதற்கு 6 மாதம் முதல் 1 வருடம் எடுத்துக்கொண்டதாக ஐஐடி ஜம்மு தெரிவித்துள்ளது. மேலும் இதனை உருவாக்க அவர்கள் எதிர்கொண்ட முதன்மையான சவால் தரவு தொடர்பானவை என்றும் பாதுகாப்பு படைக்கு போலியான ட்ரோன் எதிர்ப்பு கிரிட் அமைப்பு IB மற்றும் LOC-ல் தேவை என்றும் பல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஜம்முவில் ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இராணுவத்தின் தரவுகளை எங்களுக்கு வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த அமைப்பை இராணுவத்திற்கு வழங்க முடியும், ஏன் என்றால் எங்கள் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து மாற்றியமைக்க தரவுகள் அவசியம் என்றும் டாக்டர் நத்வானி கூறினார்.
இந்த ஒலி அடிப்படையிலான ட்ரோன் கண்டறிதல் அமைப்பின் உதவியுடன், ஆளில்லா விமானங்கள், விமானங்கள், பல ட்ரோன்கள்,பறவைகள் ஆகியவற்றை 300 மீட்டர் வரை எளிதாகக் கண்டறியலாம்.
இந்த அமைப்பை முழுமையாக தயாரிக்க ரூ.25 முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.