கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் காஷ்மீரில் நிலவும் வறட்சி காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசு ஒத்திவைத்துள்ளது.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பகுதி பிப்ரவரி 2-6 முதல் லடாக்கில் நடைபெற்றது.
இந்த அடுத்த பகுதி காஷ்மீரில் நடைபெற இருந்தது. காஷ்மீரில் நிலவும் வறட்சி காரணமாக கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டியை ஜம்மு காஷ்மீர் அரசு ஒத்திவைத்துள்ளது.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளின் நான்காவது பதிப்பு இப்போது பிப்ரவரி 20-25 தேதிகளில் தொடங்குகிறது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இதில் வரும் ஸ்கேட்டிங் போட்டிகள் இந்திய விளையாட்டு அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதில் ஹாக்கி, கால்பந்து, வுஷூ ஆகிய போட்டிகளும் நடைபெற்று வருகிறது.