பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண்கள், தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில், நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு, 35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குறிய மதிப்பெண்கள் என்றும், இந்த மதிப்பெண் தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து 6 பாடங்களுக்கு, 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.