சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது! - அண்ணாமலை குற்றச் சாட்டு
Sep 10, 2025, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச் சாட்டு

Web Desk by Web Desk
Feb 16, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக உள்ளிட்ட கட்சிகள், பெண்களுக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சென்னை மேற்கு மாவட்ட தமிழக பாஜக சார்பாக, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில், மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில்நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

பாரதப் பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சியின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்களே. மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும், மகளிரை மையப்படுத்தியே கொண்டு வரப்படுகின்றன. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, தனது தாயிடம் கற்றுக் கொண்ட பாடங்களாக, சுத்தமான, நாகரிகமான உடை, நேரம் தவறாமை ஆகியவற்றைக் குறிப்பிடுவார்.

 

குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பாரதப் பிரதமராக 10 ஆண்டுகள் என 24 ஆண்டுகளில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள், 1990களில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின்போது, காஷ்மீர் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்குப் பயப்படாமல், காஷ்மீரில் தேசியக் கொடியேற்றிவிட்டு, குஜராத் திரும்பிய போதும், பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது, தமது ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு ஆகிய இரண்டு முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

நமது பிரதமர் அவர்களின் முழு கவனமும் நாட்டின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமரின் டெல்லி அதிகாரப் பூர்வ இல்லத்தில் தங்காமல், தனது இறுதிக் காலம் வரை குஜராத்திலேயே தங்கியிருந்த தன்னலமற்ற தாய் ஹீராபென் அம்மையார் பெற்றெடுத்த தவப் புதல்வன் இன்று நமது நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.

நமது பிரதமர் மோடி அவர்கள் அரசில், பெண் குழந்தைகள் நமது நாட்டின் சொத்துக்கள் என்று பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்தவுடன் அவர்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000, ஆறாவது மாதம் ரூ.2,000, குழந்தை பிறந்தவுடன் ரூ.2,000 என கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வரை, 64% வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு இருந்தது. சமையல் செய்யும் தாய்மார்கள் குறித்த சிந்தனை, அதற்கு முன்பாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. தற்போது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் 100% வீடுகளில் புகையில்லா சமையலுக்காக, ரூ.300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, நம் தாய்மார்கள், சகோதர சகோதரிகளின் கண்ணியத்தைக் காத்திருக்கிறார் நமது பிரதமர். தமிழகத்தில் மட்டும் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகளாக, இந்தியாவில் பெண்களின் பெயரில் 3% மட்டுமே அசையாச் சொத்து இருந்து வந்தது. நமது பிரதமர்  நரேந்திர மோடி  ஆட்சியில்தான், பிரதமரின் வீடு திட்டத்தில் வழங்கப்படும் வீடுகள் 95% குடும்பத் தலைவிகள் பெயரிலேயே வழங்கப்படுகின்றன.

எளிய குடும்பத்தில் இருந்து வந்த நமது பிரதமர், சிறு வயதில் தன் குடும்பத்தினருக்குக் கிடைக்காத அடிப்படை வசதிகள் அனைத்தும், இன்று நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

திமுகவில் இருப்பதைப் போல, குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல பாஜக. எளிய குடும்பப் பின்னணியில் இருக்கும் சகோதரிகளும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் கட்சி. அதற்காகவே தேர்தல்களில் 33% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார் நமது பிரதமர் அவர்கள்.

சாமானிய மனிதருக்கே சாமானியர்களின் வலி தெரியும். 67 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில், அதன் கூட்டணியில் இருந்து திமுக உள்ளிட்ட கட்சிகள், பெண்களுக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. சாமானிய மக்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.

பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 8.5 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. திமுகவினரைப் போல, கட்சிக்காரர்களிடம் டோக்கன் வாங்க அலைக்கழிக்கும் செயலில் பாஜக ஈடுபடுவதில்லை.

இந்தியா முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும்போது, தமிழத்தில் மட்டும், மத்திய அரசு வழங்கும் அந்தப் பணத்தைக் கொடுக்காமல், ஊட்டச்சத்து பொருள் என்ற பெயரில் திமுக ஊழல் செய்துகொண்டிருக்கிறது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியில், ரூ.32 மத்திய அரசு வழங்குகிறது.

ரூ.2 மட்டுமே மாநில அரசு வழங்குகிறது. சென்னை வெள்ளத்தின் போது கொடுத்த ரூ.6,000 மத்திய அரசு வழங்கிய பணம். இப்படி மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும், திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன. ஆனால், சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு புறம் மழை வந்தால் வெள்ளம், மறுபுறம் பல ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டு நிதி எங்கே சென்றது என்றே தெரியாமல் மாநகரத்தின் உட்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். இவற்றை எல்லாம் சரி செய்ய, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்கம் தமிழகம் நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal annamalai
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

Next Post

மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

Related News

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies